Wednesday, June 23, 2021 - 10:36am
- இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று (23) முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அவையின் முதல் நடவடிக்கையாக, முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
9ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment