சிறுவனை அடித்து கொன்ற பெண்கள்!

தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு, பேய் பிடித்துள்ளதாக கூறி தாய் உள்ளிட்ட 3 பெண்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி, இவரது 7 வயது மகன் அடிக்கடி கூச்சலிட்டபடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று, சிறுவனை அழைத்துக்கொண்டு திலகவதி வந்தவாசி பகுதியில் உள்ள இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் விரட்ட சென்றுள்ளார்.

அவருடன், உறவினர் பெண் பாக்கியலட்சுமி வயது 28, திலகவதி வயது 30, மற்றும் 30 வயதுடைய கவிதா ஆகிய பெண் இருந்துள்ளனர். வந்தவாசிக்கு செல்லும் வழியில் உள்ள கண்ணமங்கலம் பேருராட்சி மண்டபத்தில் சிறுவனுடன் பெண்கள் மூவரும் தங்கியுள்ளனர்.

இரவு நேரத்தில் சிறுவன் சபரி கூச்சலிட்டதாகவும், அப்போது பெண்கள் மூவரும் இணைந்து சிறுவனை தாக்கியதோடு கழுத்து பகுதியில் கையை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை, மக்கள் தட்டிக்கேட்ட நிலையில் அவர்கள் மீதும் பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து கண்ணமங்கலம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டடுள்ளது. சம்பவ இடம்துக்கு சென்ற பொலிஸாரிடமும் பெண்கள் வாக்குவாதம் செய்ததோடு, சிறுவன் உயிருடன் இருப்பதாக கூறி கூச்சலிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுவனின் உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Add new comment

Or log in with...