அத்தியாவசிய சேவை: குறைந்தபட்ச ஊழியர்; அத்தியாவசியமற்ற சேவை: வாரம் 2 நாட்கள் பணி

அத்தியாவசிய சேவை: குறைந்தபட்ச ஊழியர்; அத்தியாவசியமற்ற சேவை: வாரம் 2 நாட்கள் பணி-Calling for Duty-Government Staff Essential Service

- அரச சேவைக்கு ஊழியர்களை அழைக்க புதிய நடைமுறைகள்
- வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு முன்னுரிமை

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற அரசாங்க சேவைகளை வழங்கும் பொருட்டு, ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை
அத்தியாவசிய சேவை வழங்கும் அரச மற்றும் பகுதியளவான அரச நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் பணிக்கு மிகவும் அத்தியாவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற சேவை
அரச மற்றும் பகுதியளவான அரச நிறுவனங்களின் அத்தியாவசியமற்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களில், அதன் பணி தொடர்பில், வீட்டிலிருந்து பணியாற்றும் நிலைமை இல்லாத நிலைமைகளின் கீழ், வாரத்தில் 2 நாட்கள் மாத்திரமே ஊழியர் ஒருவரை சேவைக்கு அழைக்க முடியும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து சேவைகள் யாவும், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பயணிப்பதற்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்துவது உரிய நிறுவனங்களின் பொறுப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களையே சேவைக்கு அழைக்க வேண்டுமெனவும், வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த அறிவிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...