2 1/2 ஏக்கருக்கான சேதனப் பசளையை தயாரிக்கும் விவசாயிக்கு தலா ரூ. 10,000

2 1/2 ஏக்கருக்கான சேதனப் பசளையை தயாரிக்கும் விவசாயிக்கு தலா ரூ. 10,000-Rs 10000 Cash Per Hectare-for Farmer Who Produce Organic Fertilizer

ஹெக்டயருக்கான (2 1/2 ஏக்கருக்கும்) சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 10,000 பணத்தை செலுத்த விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் பெரும் போகத்திற்குத் தேவையான சேதன உரங்களை உற்பத்தி செய்து வழங்குவது தொடர்பில் இன்றையதினம் (18) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு ஹெக்டயருக்கு 500 கிலோகிராம் சேதனப் பசளை, 5 கிலோ கிராம் தாவர போசணை, 5 கிலோ அமோனியம் அமிலம், 35 கிலோ பொட்டாசியம், 10 லீற்றர் உயிரியல் உரங்களை பயன்படுத்துவற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளை அரச உர நிறுவனங்கள் மூலம் எவ்வித சிக்கலுமின்றி கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...