ரணில் விக்ரமசிங்கவை எம்.பியாக பெயரிட்டு வர்த்தமானி வெளியீடு

ரணில் விக்ரமசிங்கவை எம்.பியாக பெயரிட்டு வர்த்தமானி வெளியீடு-UNP National List-UNP-Leader-Ranil-Wickremesinghe Appointed-Extraordinary Gazette

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு  பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (18) பிற்பகல் தேர்தல் ஆணைக் குழு கூடி, குறித்த வர்த்தமானி அறிவிப்பில் கையொப்பமிட்டதன் பின்னர், அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு, ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பான எழுத்து மூலமான முடிவை கடந்த புதன்கிழமை (16), அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

ஐ.தே.க.வின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு, அக்கட்சியின் செயற்குழு அண்மையில் ஏகமனதாக முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...