எம்.பியாக பெயரிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு

எம்.பியாக பெயரிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு-UNP National List-UNP Leader Ranil Wickremesinghe's Name Sent to The Election Commission

- தேர்தல் இடம்பெற்று 10 மாதங்களின் பின் முடிவு

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு, ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பான எழுத்து மூலமான முடிவு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க.வின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமித்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு, அக்கட்சியின் செயற்குழு அண்மையில் ஏகமனதாக முடிவு செய்திருந்தது.

அதற்கமைய, இன்று (16) முற்பகல், அவரது பெயரடங்கிய கட்சியின் முடிவை தேர்தல் ஆணைக்குழுவில் ஒப்படைத்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கான நியமனம் தொடர்பில், 10 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி தற்போது உத்தியோகபூர்வமான தீர்மானத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...