அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் அண்மையில் தலைமைத்துவ மேன்மைக்காக People Business உடனான மூலோபாயக் கூட்டாண்மையுடன் Colombo Leadership Academy (CLA) ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட வழங்கிய ‘Great Managers Awards 2020’ நிகழ்வில் ‘சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனம்’ (A Company with Great Managers) என்ற அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
முக்கியமான விருதை வென்றதோடு மட்டுமல்லாமல், பெறுபேறுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் சிறப்பாக நடைமுறைப்படுத்தல், நிறுவன தூரநோக்குடன் அனைத்தையும் ஒருங்கிணைத்தல், வளர்ச்சிக்காக மற்றவர்களுக்கு பயிற்சி அளித்தல், அணி செயல்திறன் மற்றும் ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவ ஒருங்கிணைப்பு ஒருமைப்பாடு மற்றும் முழுமையான அணுகுமுறை ஆகிய ஐந்து முக்கிய பிரிவுகளில் நிறுவனம் வெற்றியாளராக மாறியுள்ளது.
தலைமைத்துவ ஒருங்கிணைப்பு ஒருமைப்பாடு மற்றும் முழுமையான அணுகுமுறை என்ற பிரிவில் மாலக மிஹிந்து குலசூரியவுக்கு பிரத்தியேக இனங்காணல் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படாத ஒன்று என்ற வகையில் தனித்துவமானது. சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் சிறப்பாக நடைமுறைப்படுத்தல் சிறந்த முகாமையாளர்களாக திமிர மனமேந்திர மற்றும் நிரோஷா பெரேரா ஆகியோருக்கும், நிறுவன தூரநோக்குடன் அனைத்தையும் ஒருங்கிணைத்தலுக்காக பசிந்து மலிங்க மற்றும் குமாரிகா அமரசிங்க ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. வளர்ச்சிக்காக மற்றவர்களுக்கு பயிற்சி அளித்தல் என்ற பிரிவில், எஸ்.சிவநரேந்திரன் அவர்கள் சிறந்த முகாமையாளராகவும், அணி செயல்திறன் மற்றும் ஒத்துழைப்புக்காக வை குமரேஸ்வரனுக்கு சிறந்த முகாமையாளராகவும் விருதுகள் வழங்கப்பட்டன.
Add new comment