தன்னிச்சையான முடிவை மாற்ற சஜித் கோரிக்கை

தன்னிச்சையாக எடுக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் மீள திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எரிபொருள் விலையை

அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவை, ஒரு அமைச்சர் தன்னிச்சையாக எவ்வாறு எடுக்க முடியும்.

இவ்வாறு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறி, இதுபோன்ற தீர்மானம் எடுக்கப்படும் வரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பிற கட்சியினரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் மீது மக்கள் ஏற்கனவே நம்பிக்கை இழந்துவிட்டனர்.

மேலும் அரசாங்கம், இந்த நாட்டை ஆபத்தில் சிக்க வைத்துள்ளது. ஆகவே இத்தகைய சூழ்நிலையினை மாற்றி மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் ஒரு குழுவிற்கு ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் இராஜினாமா செய்வதே சிறந்தது என சஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...