இலங்கையில் இதுவரை 22 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி

இலங்கையில் இதுவரை 22 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி-COVID Immunization-Progress-2021-06-11

Covishield - 925,242 முதல் டோஸ் 355,177 இரண்டாம் டோஸ்
Sinopharm - 1,209,276 முதல் டோஸ் 78,025 இரண்டாம் டோஸ்
Sputnik-V - முதல் டோஸ் 64,986

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை 21 இலட்சத்து 99 ஆயிரத்து 504 பேருக்கு  (2,199,504) முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (11) இரவு 8.30 மணி வரை,

Covishield தடுப்பூசியின் முதல் டோஸ் 925,242 பேருக்கும், இரண்டாம் டோஸ் 355,177 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ் 1,209,276 பேருக்கும், இரண்டாம் டோஸ்  78,025 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Sputnik-V - தடுப்பூசியின் முதல் டோஸ் 64,986 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் இதுவரை மொத்தமாக 21 இலட்சத்து 99 ஆயிரத்து 504 பேருக்கு  (2,199,504) முதல் டோஸ் தடுப்பூசியும், 4 இலட்சத்து 33 ஆயிரத்து 202 பேருக்கு (433,202) இரண்டாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...