கப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை

தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl) கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படுமென துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். 

கப்பல் நிறுவனத்தின் மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தினூடாகவும் இந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். 
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தீ விபத்துக்குள்ளான கப்பல் மூலம் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்துக்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

இந்த தீ விபத்து மூலம் மீன்பிடித் தொழிலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் இது தவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தீ விபத்து தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதோடு சி.ஜ.டியினர் கப்பல் சிப்பந்திகளிடம் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. சேத மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.  


There is 1 Comment

Add new comment

Or log in with...