வலைஞர் மடம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!

வலைஞர் மடம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!-Explosives Found in Mullaitivu

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் ஜெக்கட் ஒன்றும் கைக்குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (23) வலைஞர்மடம் பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் இருப்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று நீதிமன்ற உத்தரவிற்கமைய குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளார்கள்.

வலைஞர் மடம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!-Explosives Found in Mullaitivu

இதன்போது ஜெக்கட் ஒன்றும் ஆறு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)


Add new comment

Or log in with...