கன மழையில் ஆற்றங்கரையோரமாக கீரை பறிக்க சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் பலி

- நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு

பெரும் மழை பெய்து கொண்டிருந்த போது கீரை பறிக்கச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கட்டான, ஹல்பே, அம்பலயாய பிரதேசத்தில் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று முன்தினம் (03) பெரும் மழை பெய்து கொண்டிருந்த போது கீரை பறிப்பதற்காக மாஓயாவிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.41 வயதான தாய் மற்றும் அவரது 9 வயது பெண் பிள்ளை மற்றும் உறவினர் ஒருவருடைய 8 வயது ஆண் குழந்தை ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கைவிடப்பட்டிருந்த களிமண் குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...