கணிதப் பிரிவில் சாவகச்சேரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் முதலிடம்

கணிதப் பிரிவில் சாவகச்சேரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் முதலிடம்-Chavakachcheri Student Thanaraj  Sundarabavan All Island First

இன்று (04) வெளியான, 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, தனராஜ் சுந்தர்பவன் எனும் மாணவனே இவ்வாறு தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்.

கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய இம்மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

(பருத்தித்துறை விசேட நிரூபர் - நிதர்ஷன் வினோத்)

உயிரியல் பிரிவு
உயிரியல் பிரிவில், கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன், பிரவீன் விஜேசிங்க, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

கலைப் பிரிவு
கலைப் பிரிவில் தெஹிவளை பிரஸ்படேரியன் பாலிகா கல்லூரி மாணவி ச்சமல்கா செவ்மினி, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

வர்த்தகப் பிரிவு
வர்த்தகப் பிரிவில் காலி சங்கமித்தா பாலிகா வித்தியாலய மாணவி அமந்தி இமாஷா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

உயிரியல் தொழில்நுட்ப பிரிவு
உயிரியல் தொழில்நுட்ப பிரிவில், ஹொரணை தக்‌ஷிலா வித்தியாலய மாணவன், சுசிக சந்தசர, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், ஹொரணை தக்‌ஷிலா வித்தியாலய மாணவன், அவிஷ்க ச்சனுக அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.


Add new comment

Or log in with...