கொழும்பில் ஒரு பொலிஸ் பிரிவு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 7 GS பிரிவுகள் முடக்கம்

கொழும்பில் ஒரு பொலிஸ் பிரிவு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 7 GS பிரிவுகள் முடக்கம்-Some More Areas Isolated-in-Colombo-Trincomalee-Nuwar Eliya-Kalutara
படங்கள்: ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்

கொழும்பில் பிலியந்தலை பொலிஸ் பிரிவு மற்றும் களுத்துறை, திருகோணமலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 7 கிராம அலுவலர் பிரிவுகள் இன்று முற்பகல் 7.00 மணி முதல் முடக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,
கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உவர்மலை மற்றும்  உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்புவழிபுரம்  ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலானை வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய, மாலமுல்ல கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நில்தண்டாஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...