இன்று நள்ளிரவு முதல் மே 17 வரை முழு நாடும் முடக்கம்?

இன்று நள்ளிரவு முதல் மே 17 வரை முழு நாடும் முடக்கம்?-All Island Lockdown-Fake News

- வதந்தி தொடர்பில் CID விசாரணை
- செய்தியை வெளியிட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

இன்று (01) நள்ளிரவு முதல் எதிர்வரும் மே 17ஆம் திகதி வரை, முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக வெளியிடப்பட்டு வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினர் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செய்திகளை வெளியிட்டு, நாட்டு மக்களிடையே அமைதியின்மை, குழப்பங்களை ஏற்படுத்துவது, எமது நாட்டின் சட்டத்திற்கு அமைய குற்றமாகும் என்பதோடு, இவ்வாறான செய்திகளை தாயரித்து, வெளியிட்டவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அஜித் ரோஹண குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...