நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 வரை பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 வரை பூட்டு-All Schools Closed in the Country Until-Apr 30

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து மேல் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பல்வேறு மாகாணங்களிலும் கொவிட்-19 பரவல் நிலையத் தொடர்ந்து அந்தந்த மாகாண முதலமைச்சர்களால் குறிப்பிட்ட கல்வி வலய பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைய, அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...