திருகோணமலை, கம்பஹா, களுத்துறையில் சில பிரசேதங்கள் தனிமைப்படுத்தல்

திருகோணமலை, கம்பஹா, களுத்துறையில் சில பிரசேதங்கள் தனிமைப்படுத்தல்-Some Areas Isolated From Today 8pm-Shavendra Silva

இன்று (26) இரவு 8.00 மணி முதல் திருகோணமலை, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் உள்ள சில கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஆகியன தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்:

  • திருகோணமலை: பூம்புஹார்
  • கம்பஹா: பொல்ஹேன, ஹீரலுகெதர, களுஅக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு
  • களுத்துறை: மிரிஸ்வத்த , பெலவத்த வடக்கு, கிழக்கு
  • தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்


Add new comment

Or log in with...