சர்வதேச பயணங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை

சர்வதேச பயணம் மேற்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் சுயேச்சைக் குழு பரிந்துரைத்துள்ளது.

‘தடுப்பூசிக் கடப்பிதழ்’ குறித்து நிறுவனம் விவாதித்து வரும் வேளையில், தடுப்பூசிகளைப் பற்றிப் போதுமான தகவல்கள் இல்லை என்பதை அந்தக் குழு சுட்டிக்காட்டியது.

தடுப்பூசிகள், பரவலாக எல்லா நாடுகளுக்கும் கிடைக்கவில்லை. அடுத்ததாக, தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு மீண்டும் வைரஸ் தொற்றுமா, அவரால் மற்றவர்களுக்கு பாதிப்பு நேருமா என்பதும் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்பதைக் குழு சுட்டிக்காட்டியது.

பயணம் செய்வதற்குத் தடுப்பூசிச் சான்று வேண்டுமென வலியுறுத்துவது, ஏற்றத்தாழ்வை அதிகரித்து, சுதந்திரமான நடமாட்டத்தில் சமமற்ற நிலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பின் நெருக்கடிக்காலக் குழு தெரிவித்துள்ளது.

என்றாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று முக்கியம் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.

மீண்டும் பயணங்களை ஆரம்பிக்கும் வழிகள் குறித்து ஆராயப்படும் வேளையில், சில நாடுகள் மின்னிலக்கத் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.


Add new comment

Or log in with...