42ஆவது ஒப்சர்வர்- ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது

பிரதம அதிதியாக சனத் ஜயசூரிய பங்கேற்பு

2020 ஆம் ஆண்டுக்கான 42 வது ஒப்சர்வர் ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடல் பாடசாலைகள் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அணி தெரிவுக்குழுவின் தலைவருமான சனத் ஜயசூரிய, கடந்த மாதம் இடம்பெற்ற லெஜண்ட்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கைக்காக தனது திறமையைக் காட்டி தனது அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்ற அவர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வை மெருகூட்டும் வகையில் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தெரண ட்ரீம் ஸ்டார் 2020 வெற்றியாளரான பலான் அன்ட்ரியா, இலங்கையின் ஹிப் ஹொப் இரட்டையர்களான பாத்தியா சந்தோஷ் ஆகியோருடன் அவர்களது முதலாவது ஹிப் ஹொப் ஸ்ரீசங்கபோதி ரீமிக்ஸ் பாடலில் இணைந்து பணியாற்றிய என்றும் பிரபலமான ரந்திர் விதானவுடன் இணைந்து நிகழ்வின் வண்ணமயமான நிகழ்வை மெருகூட்டவுள்ளார். மற்றைய இரு பிரபலமான கலைஞர்களான தெஹானி இமாரா மற்றும் மாதவி வைத்தியலிங்கம் ஆகியோரும் ஏனையவர்களுடன் இணைந்து மாலை நிகழ்வில் கலந்து கொள்ள ஆயத்தமாக உள்ளனர். அத்துடன் கயான் நடனக் குழுவும் நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளது. இரண்டரை மணி நேர இந்நிகழ்ச்சியை இம்ரான் சைபோவின் இயக்கத்தில் முன்னணி களியாட்ட நிகழ்வு அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கவுள்ளனர்.

எவர்க்ரீன் கிளிஃபோர்ட் ரிச்சர்ட்ஸ் மற்றும் சோனாலி பெரேரா ஆகியோர் மீண்டும் ஒரு தடவை இந்த மெகா ஷோவை தொகுத்து வழங்குகிறார்கள்.


Add new comment

Or log in with...