முற்பதிவு செய்தவர்களுக்கு நாளை போக்குவரத்து திணைக்கள சேவைகள்

முற்பதிவு செய்தவர்களுக்கு நாளை போக்குவரத்து திணைக்கள சேவைகள்-Department of Motor Traffic Will Provide Services as Usual for the Public on Apr 04-2021

- மாவட்ட அலுவலகங்களிலும் நடைமுறை

நாளையதினம் (12) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அளககோன் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைகளின் அடிப்படையில் 0112 677 877 எனும் தொலைபேசி மூலம் ஏற்கனவே முற்பதிவினை மேற்கொண்டவர்கள், நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களின் மூலம் தங்களது சேவைகளை பெற முடியும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மோட்டார் வாகன போக்குவரத்து சேவைகளை பெறுவதற்காக மாவட்ட அலுவலங்களில் முற்பதிவு செய்தவர்கள், குருணாகல், கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் நாளைய தினம் இச்சேவையை பெறலாம் என, திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...