ஈரான் அணு உடன்படிக்கையை செயற்படுத்துவதில் முன்னேற்றம்

அமெரிக்காவும் ஈரானும், 2015ஆம் ஆண்டில் தடைப்பட்ட அணுவாற்றல் உடன்பாட்டை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.

ஐரோப்பிய நடுவர்கள் மூலம் நடத்திய முதல் சுற்றுப் பேச்சு ஆக்ககரமாய் இருந்ததாக இருதரப்பும் கூறின. நாளை மீண்டும் பேச்சு நடைபெறும் என்று கூறப்பட்டது.

வியன்னாவில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்த இருநாட்டுப் பிரதிநிதிகளோடு ஐரோப்பிய நடுவர்கள் பேசினர். இருதரப்பும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள அவர்கள் உதவினர்.

ஈரானிய அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்க மறுத்துள்ளனர்.

ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையிலான அந்த உடன்பாட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் போது அமெரிக்கா விலகிக் கொண்டது. ஈரான் மீது அது புதிய தடைகளையும் விதித்தது. அதனைத் தொடர்ந்து ஈரான் உடன்பாட்டின் விதிமுறைகளை மீறும் வண்ணம் அணுவாற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தது.

ஜனாதிபதி ஜோ பைடன் கீழ் செயல்படும் தற்போதைய அமெரிக்க நிர்வாகம் உடன்பாட்டை மீண்டும் செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இருதரப்பும் அதற்கு உடன்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. எனினும் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொண்டுவந்த தடைகளை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியறுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...