வைரவிப்பிள்ளை பொன்னுச்சாமி ஞாபகார்த்தமாக குடும்பத்தினரின் அனுசரனையுடன் உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் நடத்திய திறந்த பிரிவினருக்கான உதைபந்தாட்டத் தொடரின் கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.
கடந்த 29 ம் திகதி திங்கட்கிழமை உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றதிறந்த பிரிவினருக்கான உதை பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் அருணோ தயா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டது. இதில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி 1: 0 என்ற கோல்கணக்கில் பெற்றி வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருதை கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி வீரர் டென்சில் றாஜ் பெற்றுக் கொண்டார்.தொடராட்டநாயகன் விருதை கட்டைக்காடு சென்மேரிஸ்விளையாட்டுக்கழகஅணி வீரர்டென்சில்றாஜ்பெற்றுக்கொண்டார்.சிறந்தகோல் காப்பாளருக்கானவிரதைஅருணோதயா விளையாட்டுக்கழக அணியின்கோல் காப்பாளர் பெற்றுக் கொண்டார்.
(யாழ்.விளையாட்டு நிருபர்)
Add new comment