பொலிஸ் ஜீப் வண்டிக்கு சேதம்; தேரர் உள்ளிட்ட இருவர் கைது | தினகரன்

பொலிஸ் ஜீப் வண்டிக்கு சேதம்; தேரர் உள்ளிட்ட இருவர் கைது

பொலிஸ் ஜீப் வண்டிக்கு சேதம்; தேரர் உள்ளிட்ட இருவர் கைது-Ven Jamburewela Chandarathana Thera & Another Arrested Allegedly Damaging a Police Jeep During A Protest in Fort

பொலிஸ் ஜீப் வண்டியொன்றை சேதப்படுத்தியமை தொடர்பில் ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று (08) முற்பகல் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது, கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு உரித்தான பொலிஸ் ஜீப் வண்டியொன்று தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் மனைவிகள் சங்கத்தினால் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, அவர்கள் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...