புதிய சட்டமூலம் நிறைவேறியதும் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம்

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர் மானித்துள்ளதாகவும் அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாகத் தேர்தலை நடத்தும் நிலைப் பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதெனவும் அமைச்சரவை பேச்சாளர் கெ​ெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கமைய விருப்பு வாக்கு முறைமையை நீக்கி, 70வீதம் தொகுதிவாரி முறைமையின் அடிப்படையிலும் 30வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.  

அதற்கமைய கடந்த 15வருடங்களாக அவதானம் செலுத்தப்பட்ட விடயத்திற்கு ஏற்ப தொகுதிகளை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டு வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்.  

அமைச்சரவையிலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாக நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

 


Add new comment

Or log in with...