தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது | தினகரன்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது

புதிய தமிழகம் கட்சி தலைவர்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,

தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளில் அரசியல் நெறிமுறைகளுக்கு மாறாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் நடந்து கொண்டன.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் என்பது ஒன்று இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் பெயரளவுக்கே உள்ளனர். ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் பணம் வழங்கி உள்ளனர். இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து தமிழகத்தில் உரிய ஆய்வு செய்து அதற்கு பிறகே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...