லா லிகா: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி! | தினகரன்

லா லிகா: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி!

லா லிகா கால்பந்து தொடரின் 29ஆவது கட்ட லீக் போட்டியில், பார்சிலோனா அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

உள்ளூர் நேரப்படி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணியும் வல்லாடோலிட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், பார்சிலோனா அணி 1-–0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதில் பார்சிலோனா அணி சார்பில், ஒசுமானே டேம்பளே போட்டியின் 90ஆவது நிமிடத்தில் அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார். இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி 65 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இதேவேளை தோல்வியை தழுவிய வல்லாடோலிட் அணி, 27 புள்ளிகளுடன் 16ஆவது இடத்தில் உள்ளது.


Add new comment

Or log in with...