வெள்ளரிப் பழத்திற்கு கிழக்கில் நல்ல மௌசு | தினகரன்

வெள்ளரிப் பழத்திற்கு கிழக்கில் நல்ல மௌசு

வெள்ளரிப் பழத்திற்கு கிழக்கில் நல்ல மௌசு-Melon Sale in Eastern Province

வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறையில் வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழவகைகள் அதிகளவு விற்பனை யாகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களிலேயே அதிகளவு வெள்ளிரிப்பழம் விற்பனையில் வியாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவு செய்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேவேளை வெளி இடங்களில் இருந்து அம்பாறைக்கு கொண்டு வரப்படுகின்ற பழ வகைகளின் தரங்களை சுகாதார பரிசோதகர்கள், ஒவ்வொரு நாளும் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் குறித்த வெள்ளரிப் பழம், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த வெள்ளரிப்பழம், வெப்பமான காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...