கொரோனா பரவல்; ஷீரடி சாய்பாபா கோவில் பூட்டு | தினகரன்

கொரோனா பரவல்; ஷீரடி சாய்பாபா கோவில் பூட்டு

மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஷீர்டியில் உள்ள சாய்பாபா கோவில், நேற்று முன்தினம் மூடப்பட்டது. மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால், மாநில அரசின் தரப்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பாதிப்பு அதிகரிக்கும் சில நகரங்களில், இரவு நேர ஊரடங்கு, பல்வேறு பகுதிகளில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்டவை, அமல்படுத்தப்பட்டு உள்ளன.  

இதன்படி, மத வழிபாட்டு தலங்களை மூடும் உத்தரவு, விரைவில் வெளியாகும் என  தெரிகிறது. இதன் முன்னோட்டமாக, ஷீர்டியில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 8:00மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கு தடை செய்யப்பட்டது.'அடுத்த உத்தரவு வரும் வரை, கோவில் மூடப்படும்' என, மஹாராஷ்டிர அரசு கூறியுள்ளது. இருப்பினும், கோவிலுக்குள் வழக்கமான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என  கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.    


Add new comment

Or log in with...