10 எதிரணியினரின் குடியுரிமையை பறிக்க முயற்சியா?

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக எதிர்க்கட்சி பிரதமக் கொறடாவும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. கேள்வி நேரத்தின்பின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதம் நாளை (08), நாளை மறுதினமும் (09) நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதனைக் காலந்தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் சதி செய்கிறது. இதற்காகவே அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்தினார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...