OPPO Erabadu Wasi மீண்டும்; நம்பமுடியாத தள்ளுபடிகள், ஆச்சரியங்களுடன் புத்தாண்டு சலுகைகள் | தினகரன்

OPPO Erabadu Wasi மீண்டும்; நம்பமுடியாத தள்ளுபடிகள், ஆச்சரியங்களுடன் புத்தாண்டு சலுகைகள்

OPPO Erabadu Wasi மீண்டும்; நம்பமுடியாத தள்ளுபடிகள், ஆச்சரியங்களுடன் புத்தாண்டு சலுகைகள்-OPPO Erabadu Wasi is back

இலங்கையின் மிகவும் பிரபலமான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் தரக்குறியீடான OPPO, அதன் விசேட புத்தாண்டு சலுகையான “OPPO ERABADU WASI” மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருவகால உற்சாகத்தை வழங்கி வருகின்றது. இச்சலுகை 2021 ஏப்ரல் 02 - 13 வரை நடைமுறையில் இருக்கும்.

OPPO வின் விசுவாசமிக்க வாடிக்கையாளரும், தமது பழைய OPPO கையடக்கத் தொலைபேசியை வழங்கி, அண்மையில் வெளியிடப்பட்ட F19 Pro இற்கு மாறிக் கொள்ள முடியும் என்பதோடு, இதன்போது ஒவ்வொரு கொள்வனவிற்கும் OPPO Enco W11 இனையும் பெற முடியும் என்பதோடு, F17 கையடக்கத் தொலைபேசியை 50% தள்ளுபடியுடன் பெற முடியும். குறித்த இரு திட்டங்களுக்கும் 6 மாதங்கள் வரை செல்லுபடியாகின்ற இலவச திரை பாதுகாப்பு காப்பீடும் வழங்கப்படுகின்றது.

விசேட புத்தாண்டு சலுகை தொடர்பில் கருத்துத் தெரிவித்த OPPO ஶ்ரீ லங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவிக்கையில், “சிங்கள தமிழ் புத்தாண்டானது, உருவாதல் மற்றும் முன்னேறுதல் என்பதன் அடிப்படையாகும்.  இதனைக் கருத்திற் கொண்டே நாம் உற்சாகமான தள்ளுபடிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம் என்பதோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் இரசனைக்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு, F19 Pro அல்லது F17 இற்கு மாறுவதன் மூலம் இந்த ஊக்குவிப்பை அடைய முடியும் என நாம் நம்புகிறோம்.

அண்மையில் வெளியிடப்பட்ட F19 Pro கைடயக்கத் தொலைபேசியானது, இலங்கை சந்தையில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் முதல் நாள் விற்பனையானது, முந்தைய தயாரிப்புகளின் முதல் நாள் விற்பனைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 200% விற்பனையை காண்பித்தது. இது அக்கையடக்கத் தொலைபேசிக்கான எதிர்பார்ப்பிற்கும் கேள்விக்கும் ஒரு சான்றாகும். இது நேர்த்தி, அதிநவீனம், செயல்பாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டமைந்துள்ளதுடன், அது பிரபல பாடகி உமாரியா சின்ஹவம்சவினால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.”

பருவகால சலுகைகளின் கீழ் OPPO சேவை வாசி மூலம், அனைத்து பழுதுபார்ப்புகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுவதுடன், சாதனங்களுக்கான இதர உபகரணங்களின் கொள்வனவுக்கு ஏப்ரல் 5 முதல் 18 வரை 20% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. சேவை நாளில் அதாவது ஏப்ரல் 10 அன்று, இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குறிப்பிட்ட சலுகைக் காலம் முழுவதும், OPPO சேவை மையத்தில் மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் அது தொடர்பான ஒத்த சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

இச்சலுகைகளானது, அனைத்து OPPO விற்பனை நிலையங்கள், அபான்ஸ், சின்ஹகிரி, நாடு முழுவதுமுள்ள டயலொக் காட்சியறைகளிலும் கிடைக்கும் என்பதோடு, Buyabans மற்றும் Daraz.lk மூலம் ஒன்லைனிலும் பெற முடியும்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.

2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Add new comment

Or log in with...