பேராயரின் குற்றச்சாட்டு; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கவலை

தன்னை இலக்கு வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்து தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். அத்துடன், இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் முழுமையான அரசியல் நோக்கங்களே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...