AMW இன் புதிய டீலர் காட்சியறை கம்பஹா கிளிட்ஸ் பார்க் இல் திறப்பு | தினகரன்

AMW இன் புதிய டீலர் காட்சியறை கம்பஹா கிளிட்ஸ் பார்க் இல் திறப்பு

AMW இன் புதிய டீலர் காட்சியறை கம்பஹா கிளிட்ஸ் பார்க் இல் திறப்பு-AMW Opens New Dealer Showroom in Gampaha

அசோசியேட்டட் மோட்டார்வேய்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனம் கிட்ஸ் பார்க் பிரைவட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கண்டி வீதி, மிரிஸ்வத்தை என்ற முகவரியில் புதிய டீலர் காட்சியறையொன்றை திறந்து வைத்ததன் ஊடாக கம்பஹாவில் தனது பிரசன்னத்தை விஸ்தரித்துள்ளது. இந்த விஸ்தரிப்பின் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக அணுகக் கூடிய வகையில் தனது உற்பத்திகளையும் சேவைகளையும் அதிகரிக்க முடியும் என AMW நம்புகிறது.

AMW தனது புதிய காட்சி அறையைத் திறந்து அதன் ஊடாக கம்பஹா மக்களுக்கு அனைத்து வகையான வாகனங்களை செளகரியமான முறையில் நம்பகத்தன்மையுடன் விற்பனை செய்யவும் கொள்வனவு செய்யவும் ஈடுஇணையற்ற தீர்வுகளை வழங்கும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு 3 வருட உத்தரவாதம், 24 மணித்தியாலங்களில் கையில் காசுடன் வாகனங்களுக்கு சிறந்த விலை வழங்கப்படும். ஒரு சில மணி நேரத்தில் வாகனப் பரிமாற்ற வசதி போன்ற நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் வழங்கப்படும்.

அனைத்து வகையான வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வசதிகளை வழங்கும் அதேநேரம், AMW வாகனங்களின் விற்பனை, விற்பனைகளின் பின்னரான சேவை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான மத்திய நிலையமாக இக்காட்சியறை விளங்கும். கிட்ஸ் பார் பிரைவட் லிமிடெட் 2005ஆம் ஆண்டு முதல் AMW நிறுவனத்தின் பங்காளராக விளங்குவதுடன், பலவருடங்களாக தனது தரமான சேவையின் ஊடாக கம்பஹா மாவட்டத்தில் நற்பெயரை வென்றுள்ள விற்பனைக்குப் பின்னரான பாரிய முகவர் நிறுவனமாகவும் வளர்ந்து வருகிறது.

இந்நிகழ்வில் AMW இன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரண்டன் மொரிஸ், கிளிட்ஸ் பார்க் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரன்சிலு வீரரத்ன, AMW இன் பயணிகள் வாகனப் பணிப்பாளர் யொஹான் டி.சொய்சா, கிளிட்ஸ் பார்க் பணிப்பாளர் ஷஷிகலா டி.சில்வா, சுசுகி பொது முகாமையாளர் விரான் டி.சொய்சா மற்றும் கிளிட்ஸ் பார்க் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

டயர் உற்பத்தி, வாகனம் (பயணிகள் கார், மோட்டார் சைக்கிள், கடல்போக்குவரத்து உற்பத்தி), உராய்வுநீக்கி எண்ணெய் மற்றும் நிதிச் சேவைகள் என வாகனகங்களின் வர்த்தக நாமங்களின் முழுமையான வெளிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகமான, நவீன, வாடிக்கையாளர் தீர்வுகளை AMW வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...