அரசுக்கு நொந்துவிடும் என்பதற்காக உண்மையை மறைக்க முற்படாதீர்கள் | தினகரன்

அரசுக்கு நொந்துவிடும் என்பதற்காக உண்மையை மறைக்க முற்படாதீர்கள்

சுமந்திரனின் கூற்றுக்கு சிவாஜிலிங்கம் பதில்

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், சுமந்திரனின் கருத்து குறித்து சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அவர், “இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை.

 


Add new comment

Or log in with...