இலங்கையின் கிராமப்புற சமூகங்களின் நீருக்கான அணுகலை மேம்படுத்தும் Coca-Cola | தினகரன்

இலங்கையின் கிராமப்புற சமூகங்களின் நீருக்கான அணுகலை மேம்படுத்தும் Coca-Cola

உலக நீர் தினம் மார்ச் 22ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இவ்வாண்டு நீர் தினத்தின் கருப்பொருளாக “நீருக்கு மதிப்பளித்தல்” என்பது விளங்குகிறது. மக்கள் தண்ணீரில் வைக்கும் சூழல், சமூக மற்றும் கலாசார மதிப்பினை மையமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு இல. 6 உடன் இணைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரத்தினை உறுதி செய்வதானது Coca-Cola வினால் மேற்கொள்ளப்பட்ட நீர் நிரப்பும் திட்டங்களில் முழுமையாக பொதிந்துள்ளது.

Coca-Colaவின் வணிகத்தின் நீண்ட கால வெற்றிக்கும் அதன் சமூகங்களின் ஆரோக்கியத்திற்கும் நீர் முக்கியமானது. இந்நிறுவனமானது தேசத்திற்கான நீர் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அதே வேளை நீர் வளங்களை பாதுகாத்தல் மற்றும் மதித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் Coca-Cola தமது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 100% தண்ணீரை சமூகங்களுக்கும் இயற்கைக்கும் திருப்பி தருவதாக உறுதியளித்துள்ளது. இலங்கையி இக்குளிர்பானவகை நிறுவனமானது 203% நீர் நிரப்புதல் நிலையை அடைந்துவிட்டது. இதன் குளிர்பான வகை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு லீட்டர் தண்ணீருக்கும், 2 லீட்டர் தண்ணீரினை உள்ளுர் நீர் முன்முயற்சிகள் மூலம் சமூகங்களுக்கும் இயற்கைக்கும் திருப்பித்தருகிறது.

Coca-Cola Beverages Sri Lanka Ltd.,இன் முகாமைத்துவப் பணிப்பாளரான மயங்க் அரோரா இது தொடர்பாக விளக்கமளிக்கையில்,

“எமது குளிர்பான வகைகளின் தயாரிப்பிற்காக பயன்படுத்தும் 100% தண்ணீரை திருப்பித் தருவதை நாம் இலக்காகக் கொண்டிருந்தோம். இன்று நாம் அவ்விலக்கினை அடைந்துள்ளோம்.

அதையும் தாண்டி தென்மேற்கு ஆசியாவில் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்ட முதலாவது Coca-Cola செயற்பாட்டு பிரிவினர் என்ற பெருமையையும் நாம் வகிக்கிறோம்.

இந்த நீர்ப்பணித்திட்டத்தில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். மேலும் நீர் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் இந்த முக்கியமான பணியைத் தொடர நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

இதில் பாதுகாப்பான நீருக்கான அணுகல் மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பு ஆகியவை அடங்குகின்றன. இவை உள்நாட்டுக்கு பொருத்தமானவை என்பதுடன் அதன் மூலம் இலங்கை முழுவதுமான உள்நாட்டு சமூகங்களை வலுவூட்டவும் உதவுகிறது” எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...