தமிழின் பெருமை சொல்லும் 'தமிழே உயிரே' | தினகரன்

தமிழின் பெருமை சொல்லும் 'தமிழே உயிரே'

தமிழ்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்புப் படையலாக வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது 'தமிழே உயிரே' பாடல். பல கலைஞர்களின் பங்களிப்போடு உருவாகியிருக்கும் இப்பாடல் பலரையும் உற்று நோக்க வைத்திருக்கின்றது.

க.குவேவின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலிற்கான இசையை கேதீஸ்வரன் துஸ்யந்தன் வழங்கியிருக்கின்றார். இசை ஒருங்கிணைப்பை இசையமைப்பாளர் சிவா பத்மயன் கீபோட், கிற்றார் வாத்திய இசையை ஜோனாதாப், வழங்கியிருக்கின்றார்.

ஈழத்தின் இசையமைப்பாளர்கள், பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என ஒரு இசைப் பட்டாளமே சேர்ந்து இப் பாடலை பாடியுள்ளனர். வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து தமிழ் மொழிக்காக இப் படைப்பை செய்தது மட்டுமின்றி இத்தனை கலைஞர்களையும் ஒருங்கிணைத்த பாடல் குழுவினரை பாராட்டலாம்.


Add new comment

Or log in with...