OPPO F19 PRO விற்பனை ஆரம்பம்; முன்னைய முதல் நாள் விற்பனையிலும் 200% சாதனை | தினகரன்

OPPO F19 PRO விற்பனை ஆரம்பம்; முன்னைய முதல் நாள் விற்பனையிலும் 200% சாதனை

OPPO F19 PRO விற்பனை ஆரம்பம்; முன்னைய முதல் நாள் விற்பனையிலும் 200% சாதனை-OPPO F19 PRO-200pcnt Increase on First Day Sales

F19 Pro கடந்த மார்ச் 15 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 23 ஆம் திகதி இலங்கையில் அதன் விற்பனை கோலாகலமாக ஆரம்பமானது. முன்கூட்டிய கொள்வனவு பதிவுகளை பெறுவதற்கும், OPPO Enco 11, இரண்டு மாதங்களுக்கான 50GB இலவச Dialog data, 6 மாத திரைக்கான பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் உள்ளிட்ட அதனுடன் இணைந்த பரிசுகளை வெல்வதற்கும் வாடிக்கையாளர்கள் போட்டியிட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. F17 Pro வின் விற்பனையுடன் ஒப்பிடும்போது இக்கையடகத் தொலைபேசியின் விற்பனை 200% ஆக அதிகரித்துள்ளது.

தமது படைப்பாற்றல்கள் கொண்ட கதைகளை சொல்ல சக்திவாய்ந்த கருவியைத் தேடும் படைப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதனை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை இக்கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது. மேம்பட்ட செயற்திறனுக்காக F19 Pro ஆனது, ColorOS 11 இயங்குதளத்தில் இயங்குவதோடு, நீண்ட நேர செயற்பாட்டிற்காக, பெரிய 4,310 mAh மின்கலத்தைதயம் இது கொண்டுள்ளது. 2ARM Cortex A-75 Pro Cores களில் இயங்கும் MediaTeckHelio P95 Octa-core புரொசஸர் மூலம் 2.2 GH வரையான வேகத்தில் இயங்குகிறது. அத்துடன் செயலி இயங்குவதற்கான வேகமான தொடக்க நேரத்தை வழங்குவதோடு, திரையின் தொடுகைக்கு மிக வேகமான செயற்பாட்டு பதிலளிப்பையும், குறைந்த பின்னடைவு நிலை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் கேமிங்கிற்கு ஏற்றதாக மாற்றுகிறது.

இதன் அறிமுக விழாவில் கருத்துத் தெரிவித்த, OPPO ஶ்ரீ லங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி,  “இலங்கையின் மிக ப்பிரபலமான பாடகியும், பிரபல The Voice நிகழ்ச்சியின் இசை பயிற்சியாளருமான புகழ் பெற்ற உமாரியா சின்ஹவம்ச மூலம், OPPO இன் அதிநவீன F தொடர் கையடக்கத் தொலைபேசியை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். F19 Pro ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கெமரா மூலம் வீடியொ பதிவை மேற்கொள்ளும் திறன் போன்ற பல அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளமை காரணமாக, வீடியோ பதிவாளர்களிடையே (vloggers) பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இக்கையடக்கத் தொலைபேசியின் வெளியீடு மிகவும் ஆக்கபூர்வமான வகையிலான கொண்டாட்டமாக அமைந்திருந்தது. உண்மையிலேயே இந்நிகழ்வு ஒரு புது வகையான அனுபவமாக இருந்ததாக, இதில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். எமது உள்ளக தகவல்களின்படி, F19 Pro முன்கூட்டிய கொள்வனவு பதிவு காலத்தில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களால் மிகுந்த ஆர்வத்துடனும் புத்தி சாதுர்யத்துடனும் தங்களது முற்பதிவுகளை மேற்கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை எமக்கு பிடித்த ஒரு சந்தை என்பதாலும், எமது பயணம் முழுவதும் எங்களுக்கு வழங்கப்பட்ட அன்பிற்கும் ஆதரவிற்கும் மாற்றீடாக, எதிர்காலத்தில் மேலும் பல சுவாரஸ்யமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.

OPPO F19 Pro ரூ. 69,990 எனும் விலையிலும், OPPO Band ரூ. 9,990 எனும் விலையிலும், நாடு முழுவதுமுள்ள அனைத்து OPPO விற்பனை நிலையங்களிலும், Abans, Sinhagiri, Dialog காட்சியறைகளிலும் மற்றும் Buy Abans, Daraz.lk உள்ளிட்ட இலத்திரனியல் வர்த்தக தளங்களிலும் கொள்வனவு செய்யலாம். F19 Pro ஆனது, ஊதா, கறுப்பு (Fantastic Purple, Fluid Black) ஆகிய இரு நிறங்களிலும் கிடைப்பதோடு, மார்ச் 30 ஆம் திகதி வரை, OPPO Enco W11, Dialog Data ஆகிய இலவச அம்சங்களுடன் கிடைக்கும்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.
2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Add new comment

Or log in with...