செரமிக் தற்காலிக இறக்குமதி தடையை நீக்க அமைச்சரவை அங்கீகாரம்

செரமிக் தற்காலிக இறக்குமதி தடையை நீக்க அமைச்சரவை அங்கீகாரம்-Approval Importing Ceramic-Cabinet Decision

- 180 நாள் கடன் அடிப்படையில் இறக்குமதிக்கு அனுமதி
- பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு நடவடிக்கை

இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள செரமிக்‌ உற்பத்திகளை 180 நாள்‌ கடன்‌ அடிப்படையில்‌ இறக்குமதி செய்வதற்காக அனுமதியை வழங்குவதற்கும்‌, பத்திக்‌ மற்றும்‌ கைத்தறி மூலம்‌ நெசவு செய்யப்பட்ட ஆடைகள்‌ மற்றும்‌ துணி வகைகள்‌ தவிர்ந்த சேலை வகைகளை 90 நாள்‌ கடன்‌ அடிப்படையில்‌ இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர்‌ மஹிந்த சமர்ப்பித்த குறித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்‌ வழங்கியுள்ளது.

இது தொடர்பான அனுமதி வழங்கும்‌ வகையிலான ஏற்பாடுகள்‌ உள்ளடங்கலாக 1969ஆம்‌ ஆண்டு 1 ஆம்‌ இலக்க இறக்குமதி மற்றும்‌ ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின்‌ கீழ்‌ வெளியிடப்பட்டுள்ள 2214/56 இலக்கம்‌ கொண்ட 2021 பெப்ரவரி மாதம்‌ 11 ஆம்‌ திகதிய வர்த்தமானி அறிவித்தல்‌ குறித்த சட்டத்தின்‌ 20 ஆம்‌ உறுப்புரையின்‌ கீழ்‌ பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக  சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...