தொழிற்சங்க நடவடிக்கையில் புகையிரத என்ஜின் சாரதிகள்

- அலுவலக புகையிரதங்கள் உள்ளிட்ட 15 சேவைகளே இடம்பெற்றன

முறையற்ற வகையிலான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (17) திடீரென முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக உறுதியளித்திருந்த புகையிரத சங்கங்கள், மீண்டும் நள்ளிரவு முதல், ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று (18) முற்பகல் 15 அலுவலக சேவைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதோடு. ஏனைய புகையிரத சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள், புகையிரத விபத்தின் போது புகையிரத சாரதிகள் ஏற்க வேண்டிய பொறுப்பு மற்றும் நஷ்ட ஈடு, பதவி உயர்வு நடைமுறையில் காணப்படும் சிக்கல் நிலை, இந்தியாவில் இருந்து புகையிரத பெட்டிகள் இறக்குமதி செய்வதை தடுத்தல் ஆகிய விடயங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே,  பணிப் புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...