மொனராகல DAG ஆடைத் தொழிற்சாலை பிரதமரால் திறந்துவைப்பு | தினகரன்

மொனராகல DAG ஆடைத் தொழிற்சாலை பிரதமரால் திறந்துவைப்பு

மொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 

500மில்லியன் ரூபாய் முதலீட்டில் டீ.ஏ.ஜீ. அப்பரல் (பிரைவட்) லிமிடட் (DAG Apparel (Pvt) LTD) புதிய ஆடை தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 600நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 3000பேர்வரை மறைமுக நன்மைகளை அனுபவிப்பர்.  இப்புதிய ஆடை தொழிற்சாலை ஊடாக ஆடை ஏற்றுமதியில் ஆண்டிற்கு 3.5பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

ரிப்பன் வெட்டி புதிய ஆடை தொழிற்சாலையை வைபவரீதியாக திறந்துவைத்த பிரதமர், அங்கு உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் முறை குறித்தும் கண்காணித்தார். 

இவ் ஆடை தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் காமினி கீர்த்திரத்ன, பணிப்பாளர் குழு உறுப்பினர்களான தினுக ஸ்ரீமால், நிபுண கித்மல், ஷானிகா காரியவசம், சுனெத் கயாஷான் ஆகியோரும் பிரதமருடன் ஆடைத் தொழிற்சாலையின் கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றனர். 

நிகழ்வுக்கு அமைச்சர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி ரத்நாயக்க, வைத்தியர் கயாஷான் நவனந்த, முன்னாள் அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.   


Add new comment

Or log in with...