"நான் கண்காணிக்கப்படுகிறேனா?" கனேடிய தூதுவர் | தினகரன்

"நான் கண்காணிக்கப்படுகிறேனா?" கனேடிய தூதுவர்

"நான் கண்காணிக்கப்படுகிறேனா?" கனேடிய தூதுவர்-Am I Under Surveillance-Canadian High Commissioner

- தூதுவர்கள் இலங்கையில் கண்காணிக்கப்படுவதில்லை

தான் கணிகாணிக்கப்படுகின்றேனா என, இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெக்கின்னன் தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளதன் மூலம் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

 

 

ஆங்கில பத்திரிகையொன்றினை மேற்கோள்காட்டி, தனக்கும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகருக்கும் இடையில், தனது இல்லத்தில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பு குறித்த தகவல்கள் குறித்த தனியார் ஊடகத்தில் வெளிவந்துள்ளதையடுத்து அவர் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அதற்கமைய, டேவிட் மெக்கின்னனின் கேள்விக்கு பதிலளித்துள்ள, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மறுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கண்காணிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தென் கொரியாவின் தூதர் இடையே இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பு குறித்த விடயங்களும் அண்மையில் ஊடகமொன்றில வெளியிடப்பட்டிருந்தன.


Add new comment

Or log in with...