லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் தெய்வாதீனமாக தப்பிப்பு | தினகரன்

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் தெய்வாதீனமாக தப்பிப்பு

டிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

ஹற்றன் நோர்வூட் பிரதான வீதியின் டிக்கோயா நகர பள்ளிவாசலுக்கருகில் நேற்று காலை 10மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் கனரக லொறியொன்றினை முந்திச்செல்ல முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை மீறிய மோட்டார் சைக்கிள் லொறிக்கு அடியில் நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் சைக்கிலிலிருந்து பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளர்.விபத்து தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...