பெருந்தொற்று: அமெரிக்காவில் பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக மக்கள் அதிக நேரம் வீட்டில் செலவிட்டபோதும் அமெரிக்காவில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பிறப்பு வீதம் குறைந்து வருகிறது. 2019ஆம் ஆண்டின் பிறப்பு வீதம் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருந்தது. ஆனால், 2020இல் இது மேலும் சரிந்தது.

2021ஆம் ஆண்டு மேலும் 3 இலட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறக்கும் என்று புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற சிந்தனைக் குழாம் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

வேலைச் சந்தையில், கொரோனா பெருந்தொற்று கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பல ஜோடிகள் கருத்தரிப்பதை தள்ளிப் போடுவதாகவும், பாலுறவு கொள்வது குறைந்துவிட்டதாகவும், பெருந்தொற்று, அதனால் ஏற்படும் செலவுகளைக் கணக்கிட்டு குறைவாகவே குழந்தை பெற விரும்புவதாகவும் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன என்று குட்மாச்சர் இன்ஸ்டிடியூட் குறிப்பிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பிறப்பு வீதம் குறைந்துவருவதால், குழந்தை நலத்திட்டங்கள், வரிச் சலுகைகள் தருவது பற்றி அரசியல் தலைவர்கள் யோசித்து வருகிறார்கள்.


Add new comment

Or log in with...