ஆண்டுதோறும் வீணாகும் 900 மில்லியன் தொன் உணவுகள்

ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் தொன்னுக்கும் அதிகமான உணவுகள் வீசப்படுவதாக சர்வதேச அறிக்கை ஒன்று தெரிவிதுள்ளது. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வுக்கான உணவுகளில் 17 வீதமானது நேராக குப்பைத்தொட்டிக்குச் செல்வதாக ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் உணவு குப்பைகள் தொடர்பான புள்ளிவிபரம் காட்டுகிறது.

அந்தக் குப்பைகளில் 60 வீதமானது வீடுகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கொரோனா தொற்றுக்கு எதிரான முடக்கநிலை ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டனில் விட்டு உணவுக் குப்பைகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பிரிவில் மக்கள் பொருட்கள் மற்றும் உணவு வாங்குவதில் கவனமாக செயற்படுகின்றனர் என்று ஐ.நாவின் கூட்டாண்மை அமைப்பான வ்ரப் என்ற தொண்டு நிறுவனம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“ஒவ்வொரு ஆண்டும் 923 மில்லியன் தொன் உணவு வீணாக்கப்படுகிறது. இது 23 மில்லியன் 40 தொன் டிரக் வண்டிகளில் நிரப்பும் அளவாகும். இந்த வண்டிகளை வரிசையில் நிறுத்தினால் பூமியை ஏழு தடவைகள் சுற்றுவதற்கு போதுமானது” என்று வ்ரப் அமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் சுவென்னல் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...