ஆரோக்கியமான சிறுவர் பரம்பரையை உருவாக்க புதிய வேலைத்திட்டம்

"ஆரோக்கியமான சிறுவர் பரம்பரையை உருவாக்குதல்" என்ற தொனிப் பொருளில் அநுராதபுர மாவட்ட பாடசாலைகளை கேந்திரமாக கொண்டு விளையாட்டும் அழகியலும் என்ற தலைப்பில் வேலை திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்ல மாவட்ட சமய,கலாசார அபிவிருத்தி குழு முன்வந்துள்ளது.

அநுராதபுர மாநகர சபையின் பங்குபற்றலுடன் மாநகர எல்லைக்குட்பட்ட சுமார் ஆயிரம் பாடசாலைகளை இதற்காக தெரிவு செய்ய குழு தீர்மானித்துள்ளதாக மாநகர சபையின் சமய,கலாசார,அபிவிருத்தி குழுவின் தலைவரும் மாநகர சபையின் உறுப்பினருமான தயாசன் யடிகல தெரிவித்துள்ளார்.

நகர பிதா எச்.பி.சோமதாசவின் வழிகாட்டல் ஆலோசனையின் பேரில் புதிய வேலை திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும்,இதற்காக கல்வி அமைச்சின் பூரண உதவியை பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இதற்கு சமமாகவே பாடசாலை விளையாட்டு திறனை வளர்ப்பதோடு,மாணவர்களின் அழகியல் வேலை திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லவும் குழு தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திறப்பனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...