தேசிய மீலாத் விழா நுவரெலியாவில் | தினகரன்

தேசிய மீலாத் விழா நுவரெலியாவில்

- ஒக். 19 இல் நடத்த ஏற்பாடு

2021 தேசிய மீலாத் விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

மீலாத் விழா ஏற்பாட்டுக்குழுவின் முதலாவது கூட்டம் (4) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் திணைக்களத்தின் அத்தியட்சகர் ஏ. பி. எம். அஸ்ரப் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம்19 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் கோலாகாலமாக நடத்தப்படும். இந்த விழாவில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

நுவரெலியா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...