உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரானின் மனைவி உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு மே 5 வரை விளக்கமறியல் | தினகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரானின் மனைவி உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு மே 5 வரை விளக்கமறியல்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி தாக்குதலை நடத்தி மரணமடைந்திருந்த தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரையும் தொடர்ந்து எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். 

அவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹரானின் மனைவி பாத்திமா ஹாதியா அசாருதீன் முஹம்மத் இல்மி, அப்துல் ஹமீட் மொகமத் ரிபாஸ், முஹம்மத் மஸ்னுக் முஹம்மத் ரிலா, 

மொகமட் அமீர் எம். அயதுல்லா, மொஹமட் முபாரக் மொகமத் ரிபாயில் ஆகியோரையே எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மேற்படி வழக்கு நேற்று முன்தினம் ஸ்கைப்செய்மதி மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மஜிஸ்திரேட் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 

இவர்களில் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கண்டி போகம்பறை சிறைச்சாலையிலும் ஏனைய கைதிகள் பூசா சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு மாஜிஸ்திரேட் நீதவான் கண்காணித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...