சிரேஷ்ட ஊடகவியலாளரும், இராஜதந்திரியுமான பந்துல ஜயசேகர காலமானார் | தினகரன்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், இராஜதந்திரியுமான பந்துல ஜயசேகர காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், இராஜதந்திரியுமான பந்துல ஜயசேகர காலமானார் -Senior Journalist & Diplomat Bandula Jayasekera Passed Away

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் Dailynews பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் இராஜதந்திரியுமான பந்துல ஜயசேகர (60) இன்று (05) அதிகாலை காலமானார்.

அவர், டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியராக 2006 - 2007 காலப் பகுதியில் கடமையாற்றியிருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சிறிது காலம் ஜனாதிபதி அலுவலக ஊடக பணிப்பாளராகவும், வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் (பொது தொடர்பு) பணியாற்றினார்.  ஊடகங்களில் அவர் இறுதியாக சிரச\ எம்டிவியில் பணியாற்றியிருந்தார்.

அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றியுள்ள அவர், நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.

பந்துல ஜயசேகரவுக்கு, கடந்த ஜூலை 2019 இல் (Myelodysplastic Syndrome) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணப்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் பலனளிக்காத நிலையில், நோய்வாய்ப்பட்ட அவர், தனது கடைசி நாட்களை காலி, கராபிட்டி மருத்துவமனையில், டாக்டர் கிரிசாந்த பெரேராவின் கீழுள்ள விசேடநோய்த்தடுப்பு சிகிச்சை மையத்தில் கழித்தார்.

ஜயசேகர தனது கடைசி நாட்களில் கூட, இலங்கையர்களுக்கு சிறந்த நோய்த்தடுப்பு சிகிச்சை வசதிகளின் அவசியத்தை உருவாக்குவது தொடர்பில் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, நோய்த்தடுப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் தனது கடைசி நாட்களைக் பயன்படுத்தினார்.

காலியில் உள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை மையத்திலிருந்து ஜயசேகருடன் மேற்கொண்ட நேர்காணல் ஒன்று கடந்த பெப்ரவரி 12 இல் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...