கிழக்கு மாகாணத்தில் காடழிப்பை கட்டுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை | தினகரன்

கிழக்கு மாகாணத்தில் காடழிப்பை கட்டுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் காடழிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆளுநர் செயலகத்தால் விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச காணிகள் மற்றும் நிலங்களில் இந்தப் பலகைகள் நடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

இதன்படி முதலாவது அறிவிப்பு விளம்பரப் பலகை, குச்சவெளிப் பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹகம்பத்தால் திறந்து வைக்கப்பட்டது. 

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் காடழிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. 

இந்த விளம்பரப் பலகையில், அரசுக்கு ஒதுக்கப்பட்டது, உட்செல்லத் தடை பாரம்பரிய எச்சங்களை நாசம்செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. காடழிப்புத் தொடர்பில் 0707011117 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத் தருமாறும் கோரப்பட்டுள்ளது.

(திருமலை மாவட்ட விசேட நிருபர்)

 


Add new comment

Or log in with...