OPPO F தொடரின் புதிய மாதிரி மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது

OPPO F தொடரின் புதிய மாதிரி மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது-Latest Model of OPPO F-Series Tipped to Launched in March

எதிர்வரும் மார்ச் முற்பகுதியில் OPPO தனது, F19 கையடக்கத் தொலைபேசி தொடரின் புதிய சாதனத்தை வெளியிடவுள்ளது என தெரிய வருகிறது. நான்கு லென்ஸ்கள், LED flash மற்றும் AI இசைவாக்கம் கொண்ட செவ்வக வடிவ அமைப்பிலான கெமரா தொகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட F19 Pro, அழகிய பின்புற வடிவமைப்பை கொண்டதாக வெளிவரவுள்ளதோடு, அதனுடன் இணைந்தவாறு, ஸ்மார்ட் கைப்பட்டி (smart band) ஒன்றும் ஒரே நேரத்தில் வெளியிடலப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விடயம் கையடக்கத் தொலைபேசி தொடரின் வெளிப்படுத்தும் சமூக ஊடக இடுகை ஒன்றில், இவ்விடயம் காணப்படுகிறது.

OPPO F19 Pro இனது வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாகக் காணப்படுவதோடு, அதன் வலது பக்கவாட்டில் ஒரு பொத்தானையும் அது கொண்டுள்ளது; இது on/off பொத்தானாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தின்படி, பின்புறமாக கைரேகை உணரியை காண முடியவில்லை. எனவே இதில் திரையின் உள்ளே அமைந்த (in-display) கைரேகை உணரியை அது கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

OPPO நிறுவனம், குறைந்த ஒளியிலான கெமரா செயற்றிறன் அம்சம் தொடர்பில் செயற்பட்டு வரும் நிலையில், இது, AI Colour Portrait Video மற்றும் முன் மற்றும் பின்புற கெமராக்களிலிருந்து ஒரே நேரத்தில் வீடியோக்களைப் பதிவு செய்ய அனுமதிக்கும் வகையிலான Dual-View Video போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஒடுங்கிய உடல் (Ultra Slim Body) அமைப்பைக் கொண்ட இந்த சாதனம் குறைந்தபட்சம் இரண்டு நிறங்களில் வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

OPPO Smart Band (கைப்பட்டி) இனை விரைவில் இலங்கையிலும் எதிர்பார்க்கலாம். புதிய F19 தொடரின் அறிமுகத்துடன் இணைந்தவாறு அது வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், OPPO கைக்கடிகாரம் (OPPO watch) ஆனது, OPPO F17 Pro உடன் வெளியிடப்பட்டிருந்தது. ஸ்மார்ட் கைப்பட்டியானது, உள்வரும் அழைப்பு அறிவிப்பு மற்றும் அழைப்பு நிராகரிப்பு ஆகியன உள்ளிட்ட கையடக்க தொலைபேசியிலிருந்து வரும் அறிவிப்புகளை காண்பிக்கும் வகையில் அமைந்திருக்குமென கூறப்படுகிறது. இரண்டு தயாரிப்புகளும் இவ்வருடம் மார்ச் நடுப்பகுதியில் சந்தையில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையில் F17 தொடரின் வெற்றிகரமான செயற்றிறனின் பின்னணி காரணமாக, ஸ்மார்போன் சந்தை தகவல்களின் படி, OPPO F19 தொடரானது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...