நைகர் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 42 பேர் விடுதலை

நைகரின் வட மத்திய மாநிலத்தில் ஆயுதக் குழு ஒன்றினால் பாடசாலை ஒன்றில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 27 மாணவர்கள் உட்பட 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நைகரின் சம்பாரா மாநிலத்தில் உள்ள மற்றொரு பாடசாலையில் 300க்கும் அதிகமான மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு அடுத்த தினமே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு நைகர் மாநிலங்களில் மீட்புப் பணத்திற்காக ஆயுததாரிகள் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.

ககாரா மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை அரச பாடாசலையில் அதிகாலை இரண்டு மணிக்கு வந்த ஆயுததாரிகள் 27 மாணவர்கள், மூன்று ஊழியர்கள் மற்றும் 12 குடும்ப உறுப்பினர்களை கடந்த வாரம் கடத்திச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தின்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டான்.

இந்நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டதை ஆளுநர் அபூபக்கர் சானி பெலோ ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவத்திற்கு ஒரு நாளைக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு பாடசாலையில் ஆயுததாரிகளால் 317 மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...